வரும் 7 ஆம் தேதி, பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அப்போது முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.