இலங்கை அதிபர் உடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்!!!

கொரோனா வைரஸ் பரவலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிப்படுத்த, அந்நாட்டு அரசுக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடி, அவ்வப்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். கொரோனா அச்சுறுத்தலால் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் சுகாதார நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அப்போது இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து தரும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும், இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

Exit mobile version