பிரதமர் நரேந்திர மோடி ’மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே இன்று உரையாடுகிறார்.
பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில், ‘மனதின் குரல்’ எனப்படும் ’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் இன்று காலை 11 மணியளவில் உரை நிகழ்த்துகிறார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, வானொலி மூலம் மோடி நிகழ்த்தும் உரை என்பதால் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் எதிர் காலத் திட்டம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மோடி தனது உரையில் கூறுவார் எனத் தெரிகிறது. மோடியின் உரையை வானொலி மட்டுமின்றி அலைபேசி மூலமும் கேட்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1922 என்ற கட்டணமில்லா அழைப்பு மூலம் மோடியின் உரையை கேட்கலாம். 2வது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மோடி, வானொலி மூலம் நிகழ்த்தும் 2வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.