மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையாரின் வரிகளை, பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசி, தமிழின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
62வது “மன் கீ பாத்“ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்காக வானொலியில் உரையாற்றிய அவர், அறிவியல், தொழில்நுட்பம், மாணவர்கள் பங்கேற்கும் தேர்வுகள் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
சாகச விளையாட்டுக்களை நடத்தும் வகையில், இந்தியாவில் புவியியல் அமைப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், மலை, கடல், பாலைவனம் என அனைத்து பகுதிகளும் நமது நாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு என்ற ஔவையாரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், அடுத்தடுத்து நாம் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவி வருவதை எண்ணி ஒவ்வொரு குடிமகனும் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.
105 வயதில், பள்ளித்தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள கேரளாவை சேர்ந்த பாகீரதி அம்மா, பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.