இந்திய விவசாயத் துறை தொடர்பான பரிந்துரைகள் வழங்க குழு அமைப்பு-பிரதமர் மோடி

இந்திய விவசாயத் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரைகள் வழங்க மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார்

கடந்த மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலேயே இந்த குழு அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி அறிவித்தார். இக்குழுவில், குஜராத், கர்நாடகா, ஹரியானா, அருணாச்சல பிரதேசம் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விவசாயத் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், விவசாயிகள் வருமானத்தை உயர்த்துவது, விவசாய பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து இந்த குழு ஆய்வு மேற்கொள்ளும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் இக்குழு ஆலோசனை வழங்கும்

Exit mobile version