மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், 5-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
5-ம் கட்ட தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு, அது வளமான இந்தியாவை நிர்ணயிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை கருத்தில் கொண்டு முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.