இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவரை அந்நாட்டு மன்னர் ஜிக்மி கேசார் நாம்கியால் வரவேற்றார். இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே கல்வி,கலாச்சார பகிர்வு, பொருளாதார வளர்ச்சி, நீர்மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. மாங்க்டெச்சு நீர்மின் நிலையம் தொடர்பாகவும், தலைநகர் திம்புவில் அமையவுள்ள இஸ்ரோவின் கிளை தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பூடான் ராயல் பல்கலைக் கழக மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக பூடானுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version