பிரதமர் மோடி – ஜி ஜிங்பிங் இடையேயான 2-வது சந்திப்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே நடக்கும் சந்திப்பில், காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது என சீனா கூறியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான, 2-வது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு வரும் அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், அதிபர் ஜி ஜிங்பிங்கும் , பிரதமர் மோடியும் அவர்கள் விருப்பப்படி தான் ஆலோசனை நடத்துவார்கள் என்றும், இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்பதால், காஷ்மீர் குறித்து, விவாதிக்கப்படும் என்பதை கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரான் இடையில் உள்ள உறவை விட, இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version