கான்பூரில் கங்கையாற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்கிறார்.
கங்கையாற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக 20ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆற்றோரங்களில் கழிவுகளைப் போடுவதைத் தடுப்பது, உயிரிப் பன்மயம், காடுவளர்ப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியன இதில் அடங்கும்.
உத்தரக்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்கிறார். சந்திரசேகர ஆசாத் பல்கலைக்கழகத்துக்கு ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் அங்கிருந்து கங்கையாற்றுக்குச் சென்று படகில் பயணம் செய்து திட்டங்களை ஆய்வு செய்கிறார். இதற்காகப் பலத்த பாதுகாப்பும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.