அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாட்கள் சுற்றுப் பயணமாக நாளை தாய்லாந்து செல்கிறார்.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஒவின் அழைப்பை ஏற்று செல்லும் பிரதமர் மோடி, ஆசியான்-இந்தியா, கிழக்கு ஆசியா, பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடுகளில் கலந்து கொள்கிறார். ஆசியன் அமைப்பைச் சேர்ந்த புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட 10 நாடுகள் மற்றும் அவற்றின் பொருளாதார கூட்டாளிகளாக திகழும் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் இடையே நடைபெறும் பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 4ம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புவார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version