நாட்டு மக்கள் உடல் உறுதியை பேணும் வகையில், ‘ஃபிட் இந்தியா’ என்ற இயக்கத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, யோகா தினம் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து ‘ஃபிட் இந்தியா’ என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ‘உடல் உறுதியை பேணுவோம்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.