ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் கவுரவ விருது வழங்கப்பட இருக்கிறது.
2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, தூய்மையான திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினார். மோடியின் இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அப்போது “பில் மெலிண்டா கேட்ஸ்” சார்பில் பிரதமர் மோடிக்கு கவுரவ விருது வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அவருக்கு இவ் விருது வழங்கப்படுகிறது. இந்த தகவலை பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மோடிக்கு வழங்கப்படும் இந்த விருது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் மற்றொரு தருணம் என்று ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.