கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் பணம் கையாடல் செய்துள்ளதாக பயனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அன்னதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி என்பவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், கட்டட வேலைகள் முடியாத நிலையில், முழுப் பணத்தையும் கையாடல் செய்ததாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் வாசுகி பதில் கூற மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஊராட்சி மன்ற செயலாளர் வேலு என்பவர் பயனாளிகளிடம் 10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு லஞ்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.