பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜக பல்வேறு தேர்தல் முன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் பிரசாரங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி நாடு முழுவதிலும் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் திரிபுரா, அகர்தலா, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசினார்.

நமது முப்படை வீரர்களையும், மத்திய அரசையும் அனைவரும் நம்ப வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version