ராகுல் காந்தி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் மோடி அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து ராகுலுக்கு சோனியா காந்தி மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Best wishes to Shri @RahulGandhi on his birthday. May he be blessed with good health and a long life.
— Narendra Modi (@narendramodi) June 19, 2019
இந்நிலையில் பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், ராகுல் காந்தி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துவதாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரக் களத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.