ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Congratulations to @HemantSorenJMM Ji and the JMM-led alliance for the victory in the Jharkhand polls. Best wishes to them in serving the state.
— Narendra Modi (@narendramodi) December 23, 2019
ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆட்சியை இழந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ரகுவர்தாஸ் ராஜினாமா செய்தார். ஆளுநர் திரெளபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ரகுவர் தாஸ், இது பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, தனக்கு ஏற்பட்ட தோல்வி என்றார். இதனிடையே, ஜார்கண்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.