சட்டமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியானாவில் பிரதமர் மோடி பிரசாரம்

சட்டமன்ற தேர்தலையொட்டி மஹாராஷ்டிராவில் 9 தேர்தல் பிரசார கூட்டங்களிலும், ஹரியானாவில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் அக்டோபர் 21 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் நடைபெறும் பிரச்சார கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அதன்படி, மஹாராஷ்டிராவில் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 9 தேர்தல் பிரசார கூட்டங்களிலும், ஹரியானாவில், அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி 4 பொதுக்கூட்டங்களிலும் மோடி பேசுகிறார். பிரதமர் மோடியை தவிர மற்ற பாஜக முன்னணி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபருடனான சந்திப்பிற்கு பிறகு மோடி தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version