நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார்!

இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 3வது முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version