பிரதமர் மோடி உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி இன்று மீண்டும் துவங்குகிறது

மக்களவை தேர்தலுக்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று மீண்டும் துவங்குகிறது.

2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதும். அக்டோபர் 3ம் தேதி மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். வளர்ச்சி பணிகள், அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றிய பிரதமர், தன்னுடைய எண்ணங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார். மக்களவை தேர்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி இன்று மீண்டும் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Exit mobile version