பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூரில் குடிமராமத்து பணியின் மூலம் தூர்வாரப்படும் குளத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கொரோனா பிரச்னை காரணமாக பாட புத்தகங்களை அச்சடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. புத்தகங்கள் இம்மாத இறுதிக்குள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணி நடக்கிறது. சூழ்நிலைக்கேற்ப பருவத்தேர்வு ரத்து செய்வது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் .

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூரில் குடிமராமத்து பணியின் மூலம் தூர்வாரப்படும் குளத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது 12 ம் வகுப்பில் தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டடியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும். மதிப்பெண் பட்டியல் தயாராகும் பணி நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு பாடதிட்டங்கள் குறைப்பது குறித்த பணி நடைபெற்று வருகிறது. சு10ழ்நிலையை பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் 11 ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து இதுவரை புகார் வரவில்லை.
புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இயக்குனர் மூலம் அறிவுரையும் கடிதமும் வழங்கப்படுள்ளது. கொரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. மாத இறுதிக்குள் தயாராகும். புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். 12 ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரம் வெளியாகும். பள்ளிகள் திறப்பது சுழ்நிலைக்கேற்ப குறித்துமுதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version