பிளஸ் 2 தேர்வர்கள் வரும் 20ம் தேதி மதிப்பெண் சான்றிதழை பெறலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வர்கள் வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ம் தேதி முதல் 26ம் தேதி வரை www..dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 6 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை துணை தேர்வு நடத்தப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்

Exit mobile version