60 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்குப் பிறகு, கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீன்பிடி முறைக்கு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை தடை அமலில் இருந்தது. இந்த தடை நிறைவடைந்ததை அடுத்து, ராமேஸ்வரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படகு ஒன்றுக்கு 2 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும் படகு உரிமையாளர்கள் கூறினர்.