ஜப்பானில் மரண காடு என்றொரு பகுதி இருக்கிறது.. அங்கே செல்வோர் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.. அதற்கான காரணம் என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது..
ஜப்பானில் உள்ள Aokigahara வனப்பகுதி இது… ப்யூஜி சிகரம் அமைந்துள்ள இக்காடு, மரங்களின் கடல் எனவும் அழைக்கப்படுகிறது.. இங்கே ஏராளமான மர்ம குகைகள் இருக்கின்றன.. பார்த்தாலே பீதியூட்டும் குகைகள், பள்ளத்தாக்குகள், நிறைந்து காணப்படுகின்றன..
அங்கே சென்று பலர் தற்கொலை செய்துகொண்டதால் அந்த காடே தற்கொலை காடு என அழைக்கப்படுகிறது.. பேய் காடு எனவும் சொல்லப்படுகிறது. கடந்த 2003 ம் ஆண்டு மட்டும் அந்த வனத்தில் இருந்து தற்கொலை செய்துகொண்டோரின் 105 உடல்கள் மீட்கப்பட்டன.
2010 ல் 200 பேர் அங்கே சென்று தற்கொலைக்கு முயன்றனர்.. அவர்களில் 54 பேர் இறந்துபோயினர்.. மற்றவர்கள் மீட்கப்பட்டனர். 2011 ல் பலர் அங்கே சென்று தூக்கில் தொங்கியும், தூக்க மருந்து உட்கொண்டுமே அதிகமானோர் தற்கொலைக்கு முயல்கிறார்கள்.
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ஜப்பானியர்கள் அதிக அளவு தற்கொலைக்கு முயல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக வனத்துறை அதிகாரிகள் அங்கே தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையை வெளியிடுவதில்லை…
தற்கொலைகளை கட்டுப்படுத்த அங்கே , மனநல ஆலோசனை போன் நம்பர்கள் வைக்கப்பட்டுள்ளன.. உடனடியாக விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன.. ஆனாலும் அப்பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என்ற தடையை ஜப்பான் அரசு போடவில்லை..
ஆண்டுதோறும் அங்கே போலீசார், தன்னார்வ தொண்டாளர்கள் ,பத்திரிக்கையாளர்கள் சென்று ஆய்வுசெய்கிறார்கள்.
Aokigahara வனப்பகுதியை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.. ஜப்பானியர்களின் தற்கொலைக்கு குடும்ப சண்டை, பண பற்றாகுறை, மன அழுத்த்ம் போன்றவை முக்கிய காரணமாக இருக்கிறது… இதை தடுக்க ஐ.நா.வும், ஜப்பான் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்த்க்கது.