நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெற்றது.
தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற ஜூன் 29, 30ம் தேதிகளில்தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் தமிழக அணி சார்பில் விளையாடக்கூடிய வீரர்களின் தேர்வு, குமாரபாளையம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், நாமக்கல், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். கேரள மாநிலம் கிரிக்கெட் குழுவின் தலைவர் சோழ ராஜன் கலந்துகொண்டு வீரர்களை தேர்வு செய்தார். ஆறு பந்துவீச்சாளர்கள், ஆறு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தென்னிந்திய கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.