தனியார் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் வாங்கப்பட்ட உணவில் பிளாஸ்டிக் இருந்தது ஆன்லைனில் உணவு வாங்குபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் ஹவுரங்காபாத்தைச் சேர்ந்த சச்சின் ஜாம்தரே என்பவர் தன் மகளுக்காக தனியார் மொபைல் செயலியில் உணவு வாங்கியுள்ளார். உணவு வீட்டிற்கு வந்ததும் இருவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது, மெல்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது என அவர் மகள் கூறியுள்ளார்.
இந்நிலையில், உணவை பரிசோதித்த சச்சின் ஜாம்தரே அதில் பிளாஸ்டிக் இருந்ததைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்ட போது உணவை எடுத்துச் சென்ற தனியார் செயலியின் ஊழியரே உணவை மாற்றிக் கொடுத்துள்ளார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆன்லைனில் உணவு வாங்குபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.