நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க தடை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரை, கால அவகாசம் வழங்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.