பிளாஸ்டிக் தடையால் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து பொதுமக்கள் பாக்கு மட்டை தட்டு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது காணலாம்.

பெரம்பலூர் நகரை ஒட்டியுள்ள 4 ரோடு பகுதியில் தமிழக அரசின் சிறு தொழில் மானியத்தோடு பாக்கு மட்டை தயாரிப்பு இயந்திரத்தை நிறுவி உள்ளார் தங்கராசு என்பவர். இங்கு பாக்கு மட்டையில் உருவான சாப்பாடு தட்டுகள் தயார் செய்யப்படுகிறது. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத பாக்குமட்டை தட்டுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் பாக்கு மட்டைகளை வாங்கி பாக்கு மட்டை தட்டுகளை தயார் செய்து வருகிறார் தங்கராசு.

பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மண்ணிற்கும் மாசில்லாத இந்த இயற்கையான பாக்கு மட்டைகளை பயன்படுத்திய பின்னர் மண்ணில் புதைத்தால் அது மக்கி எருவாகி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு சுகாதார கேடும் ஏற்படுவதில்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடையானது, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என பாக்கு மட்டை தட்டு தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் பிளாஸ்டிக் தடைக்கு பின்னர் மாற்றுப் பொருளான பாக்கு மட்டை தட்டு வரவேற்பை பெற்று வருவது ஆச்சரியமில்லை.

Exit mobile version