பிரயண்ட் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் ரோஜா செடிகள் நடவு

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக பிரயாண்ட் பூங்கா இருந்து வருகிறது. இந்த பூங்காவில் அனைவரையும் கவரும் வகையில் வைக்கப்படுள்ள வண்ண பூக்களை தொடர்ந்து, தற்போது ஜப்பான் ரோஜா நடவு பணி செய்யப்பட்டு வருகிறது, பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்த அமையும் இந்த ஜப்பான் ரோஜா பொதுவாக 7 அடி உயர மரமாக வளரக்கூடியது, தற்போது 5 மரங்கள் மட்டுமே உள்ள நிலையில்,  20 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு தற்போது அதிகளவில் ஜப்பான் ரோஜா நடவு செய்யப்படுகிறது.  நடவு செய்யும் இந்த ஜப்பான் ரோஜா சிவப்பு, வெள்ளை, ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் பூக்ககூடியது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version