திருப்பூர் அருகே, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி 82 வகை காய்கறிகளை மாடித் தோட்டத்தில் விளைவித்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அசத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த வேலுச்சாமி, குழந்தை தொழிலாளர் தடுப்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், தன்னுடயை வீட்டு மாடியில், டீ தூள், காய்கறி கழிவுகள், மாட்டு சாணம் உள்ளிட்டவற்றைக் கொண்டு, இயற்கை உரம் தயாரித்து, 82 வகையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். பலவகை கீரைகள், தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், கரும்பு, முருங்கைகாய் உள்ளிட்டவைகளை, பயன்படாத பிளாஸ்டிக் ட்ரம் மற்றும் டப்பாக்களில் வளர்த்து, அதில் நல்ல பலன் அடைந்துள்ளார். மேலும் மலை பிரதேசங்களில் மட்டும் பயிரிடக்கூடிய, பட்டர் பீன்ஸ், திராட்சை போன்றவற்றையும் பயிரிட்டு வருகிறார்.