நடப்பட்ட மரங்கள் கூடுதலாக 2,000 மருத்துவர்கள் பணிபுரிவதற்கு சமமானது – நடிகர் விவேக்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியும், தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து, மியாவாகி அடர்வனங்களை உருவாக்கி வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், மியாவாக்கி நகர்புற அடர்வனம் உருவாக்கி வருகிறது. அதன்படி ஆயிரம் சதுர அடிக்கு 250 மரங்கள் வீதம், 10 ஆயிரம் சதுர அடியில் 25 வகையிலான இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக், மருத்துவமனையில் நடப்பட்டுள்ள இந்த மரங்கள், கூடுதலாக இரண்டாயிரம் மருத்துவர்கள் பணிபுரிவதற்கு சமம் என தெரிவித்தார்.

Exit mobile version