தமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்கள்

தமிழகம் முழுவதும் நாளை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதற்காக தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

வழக்கமாக 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இரண்டு தவணையில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதால், 50 ஆயிரம் முகாம்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version