தமிழகத்தில் கைவிடப்பட்ட கல் குவாரிகளை குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு பயன்படுத்த சுரங்கத்துறை முடிவு செய்துள்ளது.
கல் குவாரிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கற்களை வெட்டி எடுக்க முடியும். அதன் பிறகு அந்த கல் குவாரிகள் கைவிடப்பட்டு விடும். இதனிடையே சென்னையை சுற்றியுள்ள கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தேங்கி நிற்கும் நீரை சுத்திகரித்து குடிநீர் தேவைக்கு பயன்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த சுரங்கத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட கல் குவாரிகளை குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பயன்படுத்த உள்ளனர். இதற்காக கல் குவாரிகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.