ஊரடங்குக்கு பின்னர் கட்டுபாடுகளுடன் மெட்ரோ ரயிலை இயக்க திட்டம்!

ஊரடங்கு காரணமாக, 43 நாட்களுக்கும் மேலாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மெட்ரோ ரயில் நிற்வாகம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, குறைவான பயணிகள் அனுமதிக்கப்படுவதுடன், 5 பேர் அமரக்கூடிய இருக்கையில் 3 பேர் மட்டுமே அமருமாறு அறிவுறுத்தப்படுவார்கள். இருக்கைகள், கைப்பிடிகள் ஆகியவை கிருமி நாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யப்படவுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கன்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு அல்லது காகித பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Exit mobile version