பள்ளிக்கு இடத்தை கொடுத்து விட்டு மீண்டும் பறிக்க மதிமுக பிரமுகர் திட்டம்

கன்னியாகுமரியில் மதிமுக பிரமுகர் அரசு பள்ளிக்காக கொடுத்த இடத்தை திரும்ப பெற நினைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக பிரமுகரான ராபின்சன் ஜேக்கப் தனது இடத்தை கொடுத்துள்ளார். தற்போது பள்ளி சீராக இயங்கி வரும் நிலையில் மீண்டும் பள்ளியின் இடத்தை பெற வேண்டும் எண்ணத்தில் ராபின்சன் ஜேக்கப் இறங்கியுள்ளார். இதற்காக மாணவர்கள் விளையாடும் பகுதிகள் மற்றும் கழிவறை பகுதியில் பள்ளம் தோண்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த செயலால் மாணவர்களின் கல்வி வாழ்வு பாதிக்கப்படும் என பள்ளி நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே கல்வி துறை தலையிட்டு மதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வழிவகை செய்யுமாறும் பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version