ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப. சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவித்ததையடுத்து, ப.சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில், வரும் 20-ம் தேதி, சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய ப.சிதம்பரம் விரும்புவதாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.