கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டம்!

நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரயில் பாதையை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படவுள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், தனது அழைப்பை ஏற்று வந்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

 

Exit mobile version