இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா, மாமல்லபுரம் உட்பட 17 முக்கிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.
இதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதற்கான விரிவான திட்ட அறிக்கை வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்க சுற்றுலாத்துறைக்கு பிரதமர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதற்காக இ-விசா பெறுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட இருப்பதாக கூறிய அவர், 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 92 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக தெரிவித்தார். சீன அதிபரின் இந்திய வருகைக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.