கனடா அரசின் அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்ற போதும், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு ஆட்சி அமைப்பதற்கான பொரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க மேலும் 13 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சியமைத்தார். மொத்தம் 37 பேர் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சீக்கியர்களும், ஒரு இந்து பெண்ணும் அடங்குவர். கனடா அரசு வரலாற்றில், இந்துப் பெண் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.