ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறையால், ஒரே படுக்கையில் 2 நோயாளிகளை படுக்கவைக்கும் நிலை உருவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில், சுமார் 700 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன.

தாராபுரம் அரசு மருத்துவமனை, மடத்துக்குளம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில், 272 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆக்சிஜன் கருவியை செயல்படுத்த பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது.

Exit mobile version