எம்ஐடி வளாகத்தில் நடைபெற்ற PISTO BOLTS கண்காட்சி

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலை கழக எம்ஐடி வளாகத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டிற்கான PISTO BOLTS கண்காட்சி மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அண்ணா பல்கலை கழக மெக்கானிக்கல் கல்வி பயிலும் மாணவர்கள் சார்பாக 2019ஆம் ஆண்டிற்கான PISTO BOLTS கண்காட்சி, குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் முன்னணி சொகுசு கார்களான BMW, BENZ, RANGE OVER, VOLVO, TOYOTA உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இதேபோல், KAWASAKI NINJA, HONDA, YAMAHA  உள்ளிட்ட முன்னணி இருசக்கர வாகனங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை காண பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வருகை தந்திருந்தனர். இதன் மூலம் வாகனங்களின் எஞ்சின் திறன் மற்றும் அதன் உட்கட்டமைப்பு, புதிய வடிவமைப்புக்கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் அறிந்துகொண்டு பயனடைந்தனர். இளைஞர்களை கவரும் விதமாக அமைந்த இந்த PISTO BOLTS கண்காட்சி அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

Exit mobile version