லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
தேசிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட லோக்பால் அமைப்பிற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான பினாகி சந்திர கோஸை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
அதன்படி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்த அமைப்பு விசாரிக்க உள்ளது. இவருடன் மேலும் 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நீதிபதிகள், திலீப்.பி.கோசலே, மெஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி, தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம், இந்திரஜித் பிரசாத் கவுதம் மற்றும், தினேஷ் குமார் ஜெயின், பிரதீப் குமார், மகேந்திர சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவிற்கு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, தலைவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.