தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேல்வருத்தூரில் உள்ள மருவூர் முருகன் ஆலயத்துக்கு 1008 பால்குடங்களை சுமந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள மருவூர் முருகன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் இருந்து 1008 பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகள் சுமந்து வந்து, மேல்வருத்தூரில் இருக்கும் முருகன் ஆலயத்தில் பாலபிஷேகம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் மயிலாட்டம் ஆடியும், வேல் குத்தி தேர் இழுத்தும், பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். இதில் மேல்மருவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.