மகர சங்கராந்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் இன்று கங்கையில் புனித நீராடினர்.
பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக வடமாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தியை முன்னிட்டு இன்று கங்கையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அதிகாலை முதலே கூடிய திரளான மக்கள் கங்கையில் புனித நீராடினர்.இதனிடையே, உத்தரபிரதேசத்தில் நாளை கும்பமேளா துவங்கவுள்ளதையொட்டியும் ஏராளமான மக்கள் கங்கையில் புனித நீராடினர்.
பிரயாக்ராஜின் சங்கம் கட் பகுதியில் இதற்கென பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.கும்பமேளாவில் 12 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் துவங்கி வரும் மார்ச் 4ம் தேதிவரை நடைபெறவுள்ள கும்பமேளாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.