அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், பக்தர்கள் குவியத் துவங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பிரசித்தி பெற்ற, சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, வனத்துறை சார்பில் நான்கு நாட்கள் மட்டும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களை முன்னிட்டு அனுமதி வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் அமாவாசையையொட்டி தற்போது அனுமதி வழங்கப்படுள்ளதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே குவிந்த வண்ணம் உள்ளனர்.