சதுரகிரி மலைக்கு செல்ல ஜூலை 27 முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது…

சதுரகிரி மலை சுந்தரமகாலிங்க கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர், வரும் ஆடி அமாவசையை முன்னிட்டு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய உள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களை ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மலை ஏறவும், இறங்கவும் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக இரு மாவட்ட ஆட்சியர்களும் தெரிவித்தனர்…

Exit mobile version