திருவண்ணாமலையில், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கார்த்திகை தீபம் கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், இன்று அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து, கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்பொழுது பக்தர்கள் வழிநெடுகிலும், சாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, அடி அண்ணாமலையில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கிரிவலம் வந்த அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.