திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரை தேட வரும் புறா உள்ளிட்ட பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அமராவதி உடுமலை வனச்சரக பகுதி ஆனைமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு சுற்றுலா தளமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் உள்ள விலை நிலங்களில் மயில், புறா உள்ளிட்ட பல்வேறு பறவைகள் இரை தேடி வந்து செல்கின்றன. அங்குள்ள செங்குளம், ஒட்டுகுளம், திணை குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக, இறை தேட பறவைகள் வந்து செல்கின்றன. இது அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.