கருத்தடை செய்யப்படுவதை எதிர்த்து, பன்றிக்குட்டி ஒன்றின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளவர்கள் ’பீட்டா’ விலங்குகள் நல அமைப்பினர். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பன்றிக்குட்டிகளின் பெயரே கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பல நாடுகளில் ஆண் பன்றிக்குட்டிகளின் விதைப்பைகளை அகற்றிவிடும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது.பருவமடைந்த ஆண் பன்றிகளை சமைக்கும்போது ஒரு வித துர்நாற்றம் வீசுவதுண்டு. இதைத் தவிர்ப்பதற்காக ஆண் பன்றிக் குட்டிகளின் விதைப்பைகளை அகற்றிவிடுவதுண்டு. இந்நிலையில், பல இடங்களில் மயக்க மருந்து கூட கொடுக்காமல், பன்றி துடிதுடிக்க, விதைப்பைகள் நீக்கப்படுவதுண்டு.
இதை எதிர்த்து 2013ஆம் ஆண்டு ஜேர்மன் நாடாளுமன்றம் இனி மயக்க மருந்து கொடுக்காமல் பன்றிக்குட்டிகளுக்கு கருத்தடை செய்யக்கூடாது என சட்டமியற்றியது.இந்த புதிய மாற்றத்திற்கு ஐந்தாண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு மீண்டும் இந்த அவகாசம், 2021 வரை நீட்டிக்கப்பட்டதால் விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபமடைந்தார்கள்.
எனவேதான் பன்றிக்குட்டிகள் சார்பில் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.