நோயாளிகள் வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில்  பேட்டரி மூலம் இயங்கும் குப்பை பெறும் வாகனத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளை அவர்கள் வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ள, கூடுதல் பிசியோதெரபிஸ்ட் மற்றும் செவிலியர்கள் நியமிக்க அனுமதி கிடைத்துள்ளதாக  தெரிவித்தார். மேலும்  மருத்துவத் துறையில் தமிழகம் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும்  கூறினார்.

Exit mobile version