மாற்று திறனாளிகள் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் காது கேளாதோர் மற்றும், மாற்று திறனாளிகள் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் தலைவர் மெய்கன்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் அவர்கள் பெற்றோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான போட்டியில் தங்க பதக்கம் வென்ற ப்ரீத்தி சிவ பிச்சமாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், மாற்று திறனாளிகளுக்கு தனி விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

Exit mobile version